காலம் குறிப்பிடாது ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள்

கொரோனா பாதிப்பு எதிரொலியாக ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்ற கிரிக்கெட் திருவிழாக்களில் ஒன்றான ஐபிஎல் போட்டிகள் கடந்த மார்ச் 29ந்தேதி தொடங்கி மே 24ந்தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.

ஆனால் கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த போட்டிகள் ஏப்ரல் 15ந்தேதி வரை ஒத்தி வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடெங்கிலும் மே 3ந்தேதி வரை ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக 8 அணிகளின் உரிமையாளர்களுக்கு பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor