உலகப்புகழ் பெற்ற கண்ணபுரம் மாட்டுச் சந்தை ஒத்திவைப்பு.!!

காங்கேயம் அருகே உலக புகழ்பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமையான கண்ணபுரம் மாட்டுச் சந்தை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகேயுள்ள கண்ணபுரத்தில் உலகப்புகழ் பெற்ற காங்கேயம் இன மாடுகள் மற்றும் காளைகளுக்கான மாட்டுச்சந்தை துவங்குவது வழக்கம் .

இதில் பல்லாயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்காக வருவதும் தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வியாபாரிகளும் விவசாயிகளும் பங்கேற்பர்.

கடந்த ஆண்டு கன்றுகள் ரூ.30ஆயிரம் வரையும் , கறவை மாடுகள் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரையிலும், காளைகள் ரூ.2 லட்சம் வரையிலும் விற்பனையாகியது .

புகழ்பெற்ற கண்ணபுரம் மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் புகழ் பெற்ற காங்கேயம் இன மாடுகளுக்கான கண்ணபுரம் மாட்டுசந்தை நடைபெறுவது வழக்கம்.

இதில் திருப்பூர் , ஈரோடு , நாமக்கல் , கரூர், கோவை மாவட்டங்களில் இருந்து பல்லாயிரகணக்கான மாடுகள் விற்பனைக்காக வருவது வழக்கம் .

அனால் தற்போது இந்த வருடம் கொரானா வைரஸ் காரணமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டின் காரணமாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது .

எனவே தமிழகம் மற்றும் அண்டைமாநிலங்களில் இருந்து வரும் விவசாயிகள் மற்றும் மாட்டு வியாபாரிகள் யாரும் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது .

Recommended For You

About the Author: Editor