போருக்கு தயாராகும் ராஜபக்ச படைகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர்.

அவர்கள் இன்னொரு போருக்குத் தயாராக உள்ளனர். எனவே, ராஜபக்ச படைகளாகிய நாமும் போருக்குத் தயாராகவே உள்ளோம்.

இவ்வாறு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

தமிழர்களுக்கு சுயநிர்ணய ஆட்சிதான் தேவையெனில் வடக்கு, கிழக்கு பிரதேசங்களுக்கு வெளியே வாழும் தமிழர்கள் தொடர்பில் அவர்களின் நிலைப்பாடு என்ன?

அவ்வாறெனில் சிங்களப் பகுதிகளில் வாழும் தமிழர்களை வெளியேற்ற வேண்டும் என்றா கூற வருகின்றனர்? சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் இதனையா எதிர்பார்க்கின்றனர்? முதலில் இந்தக் கேள்விக்கு அவர்கள் பதில் சொல்லியாகவேண்டும்.

எனவே அவர்களுக்கு அவர்களின் பாணியில் தக்க பதிலடியை வழங்க எந்நேரமும் நாம் தயாராகவே இருக்கின்றோம்.

மக்கள் பிரதிநிதிகள் என்ற திமிருடன் இம்மூவரும் செயற்படுகின்றார்கள். அவர்கள் திருந்த வேண்டும். இல்லையேல் நாமே அவர்களைத் திருத்த வேண்டி வரும்.

அது எந்த வழியில் என்பது அவர்களின் செயற்பாடுகளில்தான் தங்கியுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor