கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு

கொரோனா தொற்றை அடுத்து வீட்டிலிருந்தே வேலைசெய்து பழகிவிட்ட தொழிலாளர்களுக்கு கலந்துரையாடல், இரவு – பகல் வேலை என்று அழுத்தம் தற்போது அதிகரித்துள்ளது.

தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளார்களின் உடல் மற்றும் மனநலத்தை பாதுகாப்பது அவசியம் என்பதை உணர்ந்த கூகுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பாக தொழிலாளர்களுக்கு மூன்று நாட்கள் வாரவிடுமுறை அளித்துள்ளது.

மேலும் இந்த மூன்று நாட்கள் விடுமுறையில் வெள்ளிக்கிழமை திடீரென அவசரவேலை வந்துவிட்டால் வெள்ளிக்கிழமை விடுமுறையை மற்றொரு நாளில் மாற்றி எடுத்துக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

மேலும் தொற்றுநோய் முடிவுக்கு வராத நிலையில் தொழிலாளர்களின் உடல் நலம் மற்றும் மன நலத்தைப் பாதுகாப்பது அவசியம் என்றும், அதிக அழுத்தம் மன உளைச்சலை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.

Recommended For You

About the Author: Editor