வெளிநாட்டுக்கு கடத்த தயாரான 10 கிலோ தங்கம் சிக்கியது

வெளிநாடொன்றுக்கு எடுத்துச் செல்லும் வகையில் மிகவும் நுணுக்கமான முறையில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கிலோ தங்கத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கற்பிட்டி பாலாவி வீதியின் பாலந்துடாவ சந்தியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மோட்டார் காரில் மிக நுணுக்கமான முறையில் 8 பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த தங்கம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் புத்தளம் கந்தக்குடி பகுதியை வசிப்பிடமாக கொண்ட 34 வயதுடைய நபர் எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor