மத்திய வங்கியின் ஆளுநருடன் டக்ளஸின் பிரதிநிதிகள்

மத்திய வங்கியின் ஆளுநருடன் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவின் பிரதிநிதிகள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தில் கடன்களைப் பெற்று விவசாயம் கடற்றொழில் மற்றும் சிறு உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டவர்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

கடனை செலுத்த முடியாமல் சிக்கலை எதிர் கொண்டவர்களுக்கு நுண்கடன்களிலிருந்து மீள்வதற்கான வழிவகைகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த குழுவினர் மத்திய வங்கியின் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயம் கடற்றொழில் மற்றும் சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கு விரும்புபவர்களுக்கு அரசாங்கம் பல்வேறுவிதமான கடன் திட்டங்களை அவ்வப்போது அறிவித்தாலும் அந்த கடன்களை இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியாமல் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றது.

இதற்கு உரிய தீர்வொன்றினை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor