அரசியல்வாதிகள் அதிகார போதையில்; நாடு பேராபத்தில் இருக்கிறது

பி.கே.ஆர் தலைவரான அன்வர் இப்ராஹிம் கூட்டாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கையைக் கொண்டிருப்பதாகக் கூறியிருப்பது, தொற்றுநோய்க்கான மூன்றாவது அலையின் எச்சரிக்கையின்போது மலேசியா மற்றொரு அரசியல் நெருக்கடியையும் காணக்கூடும்.

இதை குறித்து விரக்தியை வெளிப்படுத்திய மலேசிய சோசியலிச கட்சி துணைத் தலைவர் எஸ்.அருட்செல்வன் அரசியல்வாதிகள் மக்களின் செலவில் தங்கள் நலன்களைப் பெற்றுக்கொள்ள நினைக்கிறார்கள் என விமர்சித்தார்.

“சபா தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது என்று பாருங்கள். கோவிட் -19 வழக்குகளில் கூர்மையான அதிகரிப்பு உள்ளது.

“இந்த அரசியல்வாதிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கையின் மீது மக்கள் கோபமாக உள்ளனர். அரசியல்வாதிகள் தங்கள் உயிர்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் ஆபத்தில் ஆழ்த்துகின்றனர்.”

“கோவிட் -19 பொருளாதாரத்திற்கு கடுமையான அடியைக் கொடுத்தது, அரசியல்வாதிகள் தங்கள் முடிவில்லாத ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ மூலம் அதை மோசமாக்குகிறார்கள்,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

தினசரி ,வேலை இழந்த தொழிலாளர்களிடமிருந்து பிஎஸ்எம் அலுவலகத்திலற்கு அழைப்புகள் பெருகிக்கொண்டு வருகிறது. அவர்கள் நிதி உதவியையும் நாடுகின்றனர்.

மேலும், இயக்க கட்டுப்பாடு விதியை மீறியதற்காக மக்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், அதிகாரத்தில் இருப்பவர்கள் விதிகளை புறக்கணிப்பதாகவே தெரிகிறது.

பிரதமர் முஹைதீன் யாசினின் அரசாங்கம் தொடர்ந்து உள் மற்றும் வெளி சக்திகளின் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக அருட்செல்வன் சுட்டிக்காட்டினார்.

“இத்தகைய சூழ்நிலைகளில் அவரது நிர்வாகம் எவ்வாறு வைரஸ் மற்றும் பொருளாதாரத்தில் கவனம் செலுத்தப் போகிறது?

“இது கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் ஆணையை மதிக்காததற்கான பாதிப்பேயாகும் , இப்போது இந்த அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் காரணமாக மக்கள் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அன்வார் புத்ராஜெயாவைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் முயற்சியில் பெரிகாதான் நேஷனல் கூட்டணி ஒரு பொதுத் தேர்தலை கட்டாயப்படுத்துவது குறித்து அருட்செல்வன் மிகவும் கவலை கொண்டுள்ளார்.

“இது நடந்தால், நாம் அழிந்து போவோம்,வைரஸ் இறுதி வெற்றியாளராக இருக்கும்.”என்று அவர் கூறினார்.

அதே வேளையில், அருட்செல்வன் அன்வரின் திட்டத்தை ஒத்திவைக்குமாறு அம்னோ இளைஞர் தலைவர் அசிராஃப் வாஜ்டி டுசுகி விடுத்த வேண்டுகோளை பாசாங்குத்தனமாக தெரிகிறது என்றார்.

“தேசத்திற்கு மற்றொரு அரசியல் நெருக்கடியைத் தாங்க முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றாலும், ஷெரட்டன் இயக்கம் மற்றும் சபா நகர்வின் போதும் அசிராஃப் அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமீடிக்கும் அதே கருத்தை வலியுறுத்தியிருக்க வேண்டும்.”

“எனவே அது உங்கள் அரசியல் நலனுக்காக இருக்கும்போது, ​​’பொதுமக்களின் பாதுகாப்பு’ புறக்கணிக்கப்படலாம். ஆனால் இப்போது, ​​’பொதுமக்களின் பாதுகாப்பு’ முக்கியத்துவம் பெற்றாகிவிட்டது , ” என அவர் விமர்சித்தார்

Recommended For You

About the Author: Editor