மகிழுந்து திருடனுக்கு கத்திக்குத்து!

இரு திருடர்கள் இணைந்து மகிழுந்து ஒன்றை திருட முற்பட்டுள்ளனர். திருடர்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு Thiais  (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இங்குள்ள rue Hélène Muller வீதியில் நபர் ஒருவர்  தனது மகிழுந்தை நிறுத்திவிட்டு தனது நண்பர் ஒருவருக்காக மனைவியுடன் காத்திருந்துள்ளார்.
நள்ளிரவு 12:30 மணி அளவில் இரு நபர்கள் கையில் கத்தி ஒன்றுடன் அவரை நெருங்கினார்கள். அவரது BMW மகிழுந்தை திருடும் நோக்கோடு அவர்கள் வந்துள்ளனர்.
நண்பரை எதிர்பார்த்திருந்த அவருக்கு திருடர்களை எதிர்கொள்வது முதலில் அச்சத்தை ஏற்படுத்தினாலும் பின்னர் திருடர்களை எதிர்கொள்ள தயார் ஆகினர்.
திருடர்களின் ஒருவன் கத்தியை வைத்து மகிழுந்து உரிமையாளரை தாக்கி கீழே விழுத்தியுள்ளான். பின்னர் மகிழுந்துக்குள் இருந்த அவரது மனைவியையும் தாக்கியுள்ளான். மகிழுந்தை திருடிக்கொண்டு செல்ல முற்பட்டபோது, மகிழுந்து உரிமையாளர் சுதாகரித்துக்கொண்டார்.
அவர் திருடன் ஒருவனை தாக்கியுள்ளார். கத்தியை அவனிடம் இருந்து பறித்ததோடு, அவனை கத்தியால் குத்தியும் உள்ளார். பின்னர் இரண்டாவது திருடனையும் கத்தியால் குத்தியுள்ளார்.
இச்சம்பவத்தில் திருடன் ஒருவன் கொல்லப்பட்டுள்ளான்.  இரண்டாம் திருடன் தோள் பட்டையில் பலத்த காயத்தோடு தப்பி ஓடியுள்ளான். இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Recommended For You

About the Author: Editor