
இன்று வெள்ளிக்கிழமை காலை RER C தொடருந்து சேவை தடைப்பட்டது.
காலை 10 மணி அளவில் Musée d’Orsay தொடருந்து நிலையத்தில் RER C சேவைகள் இரு திசைகளிலும் தடைப்பட்டன. மர்மான பொதி ஒன்று கண்டறியப்பட்டுள்ளதால் இந்த சேவை, பாதுகாப்பு காரணங்கள் கருதி தடை செய்யப்பட்டது.
காலை 10 மணியில் இருந்து 12 மணி வரை சேவைகள் தடைப்பட்டுள்ளது. தேடுதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து சேவைகள் வழமைக்குத் திரும்பின.