
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை ‘பிசாசு’ போன்று பத்திரிகை ஒன்று சித்தரித்துள்ளது.
பிரான்சுக்கும் ஈரானுக்கும் இடையிலான முறுகல் நிலை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. பிரான்ஸ் மீது இஸ்லாமியர்களின் கோபம் பல விதங்களில் வெளிப்பட்டு வரும் நிலையில், ஈரானைச் சேர்ந்த தின பத்திரிகை ஒன்று, தனது அட்டைப்படத்தில் இம்மானுவல் மக்ரோனை பிசாசு போன்று சித்தரித்து, பரிசின் அரக்கன் (Le démon de Paris) என தலைப்பிட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை ஒக்டோபர் 27 ஆம் திகதி வெளியான ஈரானின் Vatan Emrooz பத்திரிகையிலேயே இந்த ஓவியம் வெளியாகியுள்ளது.