மீன்களை கொள்வனவு செய்ய அரசு தீர்மானம்

கொரோனா தொற்று பரவல் காரனமாக விநியோகிக்க முடியாத நிலையில், தேக்கி வைக்கபட்டுள்ள மீன் தொகைகளை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 4 நாட்களுக்குள் இவ்வாறு மீன் தொகைகள் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக கடற்றொழில் மற்றும் மீன் ஏற்றுமதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் மீன்களை செமன் உற்பத்திக்காக பயன்படுத்த தீர்மானிக்கபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, பேலியக்கொடை கொரோனா தொற்றுப்பரவலை தொடர்ந்து மூடப்பட்டிருந்த பேருவளை மீன் விற்பனை நிலையம் 6 நாட்களுக்கு பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், பேலியகொடை மீன் சந்தையை மீண்டும் திறப்பது குறித்து இதுவரை எந்த தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor