இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்தார் மைக் பொம்பியோ!!

லங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

மைக் பொம்பியோ நேற்று இரவு இலங்கைக்கு வருகைத் தந்திருந்த நிலையில், இன்று (புதன்கிழமை) காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினார்.

அதன் பின்னர் செய்தியாளர் மாநாட்டிலும் கலந்துகொண்ட அவர், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திற்கும் விஜயம் செய்தார்.

இந்நிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 1.06 மணியளவில் விசேட விமானத்தின் ஊடாக மாலைத்தீவை நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளார்.

Recommended For You

About the Author: Editor