
யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் பகுதியில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இன்று காலை காங்கேசன்துறை பொலிஸ் தலைமைக்காரியாலயமும் அச்சுவேலி பொலிஸ் நிலையமும் சமூகமட்ட அமைப்புக்களும் இணைந்து “மீட்டரான வாழ்க்கை” எனும் தொனிப்பொருளில் இந்த செயற்திட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது புத்தூர் ஆவரங்கால் சந்தியில் வீதியால் பயணித்த போக்குவரத்து பேருந்து மற்று சிற்றூர்திகளில் கொரோனா விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் ஒட்டப்பட்டன.