ஐ.நா. ஆலோசனைக் குழுவில் இடம்பெற்ற இந்திய பெண்மணி!

ஐ.நா பொதுச்சபையின் நிர்வாகம் மற்றம் பட்ஜெட் கேள்விகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்கு இந்திய வேட்பாளரான விதிஷா மைத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

ACABQ எனப்படும் இந்த குழுவானது பொதுச்சபையால் தனித்துவமாக நியமிக்கப்படுகிறது. 16 உறப்பினர்களைக் கொண்ட இந்த குழுவில் இந்தியாவைச் சேர்ந்த ஒரு பெண்மணி இடம் பெற்றிருக்கிறார். இது உலக அளவில் இந்தியாவிற்கு பெருமையைத் தேடித் தந்திருக்கிறது.

மேலும் இத்தேர்வைக் குறித்து கருத்துத் தெரிவித்த இந்தியாவின் நிரந்தர தூரதர் டி.எஸ். திருமூர்த்தி, ஐ.நா உறுப்பு நாடுகளின் வலுவான ஆதரவுடன் இந்தியாவின் வேட்பாளர் விதிஷா மைத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஐ.நாவின் பட்ஜெட் மற்றும் நிர்வாகத்தின் மீது தற்போது ஏற்பட்டுள்ள அழுத்தமான சூழ்நிலையில் இந்தியர் ஒருவர் இந்த குழுவில் இடம்பெற்றிருப்பது மிகவும் இன்றியமையாதது என்றும் அவர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.

இத்தேர்வு ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவுக்கான ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. ஆசிய பசிபிக் நாடுகளின் குழுவில் இருந்து ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பணி மற்றும் முதல் செயலாளராக விதிஷா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இவருக்கு 126 வாக்குகள் கிடைத்து இருகிறது.

193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச்சபை ஆலோசனைக் குழுவில் 126 வாக்குகளைப் பெற்று தற்போது நிர்வாகம் மற்றும் பட்ஜெட் சிக்கல்களைக் கையாளும் பொதுச்சபையின் ஐந்தாவது குழுவில் விதிஷா இடம் பெறுகிறார்.

இதனால் வரும் 2021 ஜனவரி 1 முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு மைத்ரா ஐ.நா பொதுச்சபையின் சட்டமன்றக் குழுவில் இடம்பெறுவார். மேலும் இந்தியா ஜனவரி 2021 முதல் ஐ.நா. பாதுகாப்பு குழுவில் நிரந்தரமற்ற உறுப்பினராக இடம்பெற இருக்கிறது.

இந்நிலையில் ஆலோசனைக் குழுவில் இந்தியா சார்பாக ஒரு பெண்மணி இடம் பெறப்போகிறார். இத்தகைய நிலைமைகள் உலக அளவில் இந்தியாவின் குரலை உயர்த்திக் காட்டும் எனக் கருத்துக் கூறப்படுகிறது.

ஐ.நாவின் பொதுச்சபைக்கு, பொதுச்செயலாளர் சமர்பித்த வரவு செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அறிக்கை அளிப்பதும் எந்தவொரு நிர்வாக மற்றும் பட்ஜெட் விடயங்கள் குறித்து பொதுச் பொதுச்சபைக்கு ஆலோசனை வழங்குவதும் இந்தக் குழுவின் முக்கிய வேலையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

மேலும் பொதுச்சபை சார்பாக சிறப்பு நிறுவனங்களின் நிர்வாக வரவு செலவு திட்டங்கள் மற்றும் அத்தகைய நிறுவனங்களுடன் நிதி ஏற்பாடுகளுக்கான திட்டங்களையும் இந்தக் குழு ஆராய்கிறது.

Recommended For You

About the Author: Editor