கமலா ஹாரீஸ் உடன் கமல் பட நடிகை!

அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அவர்களுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் உள்பட பல இந்திய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது பிரபல நடிகை ஒருவர் கமலா ஹாரீஸ் அவர்களுடன் 10 வருடங்களுக்கு முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

கமல்ஹாசன் நடித்த ’தசாவதாரம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத். இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கடந்த 2010ஆம் ஆண்டு கமலா ஹாரிஸ் உடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.

அப்போது கமலா ஹாரீஸ் சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் அட்டர்னி ஜெனரலாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கமலா ஹாரிஸ் அவர்களை சந்தித்தபோது தனக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்தார் என்றும் மல்லிகா ஷெராவத் அதில் பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பத்து வருடங்களுக்கு பின் தற்போது கமலா ஹாரீஸ் துணை அதிபராக தேர்வாகிய நிலையில் திடீரென வைரலாகி வருகிறது

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குறிப்பாக தமிழகத்தின் மன்னார்குடியில் பகுதியை சேர்ந்த கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதை அடுத்து அவரது சொந்த ஊரை சேர்ந்தவர்கள் கடந்த இரண்டு நாட்களாக திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor