ரஷ்யாவில் நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 21ஆயிரத்து 798பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 256பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும் மையம் தெரிவித்துள்ளது.

ரஷ்யாவில் வைரஸ் தொற்று பரவியதிலிருந்து பதிவான நாளொன்றுக்கான அதிகபட்ச பாதிப்பு எண்ணிக்கை இதுவாகும்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நான்காவது நாடாக விளங்கும் ரஷ்யாவில், இதுவரை மொத்தமாக 17இலட்சத்து 96ஆயிரத்து 132பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30ஆயிரத்து 793பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நான்கு இலட்சத்து 30 ஆயிரத்து 198பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதவிர ரஷ்யாவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 13 இலட்சத்து 35ஆயிரத்து 141பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor