கைதிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆலோசனை!

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கைதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பான நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு அமைய சட்டமா அதிபர் பதில் பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதனடிப்படையில் சட்டமா அதிபர் தப்புல த லிவேராவினால் திருத்தப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் சில வௌியிடப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகளில் பிணை வழங்க முடியுமான கைதிகளுக்கு பிணை வழங்குமாறும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதனை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor