அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடன் கையாளவிருக்கும் விடயங்கள்!

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடன் தனது ஆட்சிக் காலத்தில் கையாளவுள்ள முக்கிய விடயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதனடிப்படையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய சுகாதார நெருக்கடியான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துதல் தொடர்பிலேயே ஜோ பிடன் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்று திட்டம் தொடர்பான அறிவிப்பில் அமெரிக்காவில் அதிகளவான கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளவும், அமெரிக்கர்கள் அனைவரும் முகக் கவசங்களை அணிவதற்கான உத்தரவுகளை பிறப்பிப்பதற்கும் ஜோ பிடன் தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தவிர அமெரிக்க பொருளாதாரம், உலகளாவிய ரீதியில் நிலவும் இன முரண்பாடுகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விவகாரங்களிலும் ஜோ பிடன் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக தக்வவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் அதிக வாக்குகளால் வெற்றிபெற்றுள்ள போதிலும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

எவ்வாறாயினும் தமது எதிர்கால திட்டங்கள் குறித்து ஜனநாயகக் கட்சியின் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor