காட்டுத்தீயால் பூமியின் மேல் மண்டலத்தில் அதிகப் புகை – உலக வெப்பம் குறைந்ததா ?

ஆஸ்திரேலியாவின் அண்மைக் காட்டுத் தீ பருவத்தால் பூமியின் மேல் மண்டலத்தில் அதிகப் புகை காணப்படுகிறது.

அதன் காரணமாக, உலக வெப்பம் சற்றுக் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காட்டுத் தீயால் சுழற்றப்பட்ட காற்று உலகம் முழுவதும் நகர்ந்தது.

தீயால் மிக அரிதான இடிமின்னல் மேகங்கள் உருவாயின.

அவை பூமியைக் குளிரூட்டும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கவில்லை.

அது சில மாதங்களுக்கு, பூமியின் மேற்பரப்பை எட்டும் சூரிய ஒளியின் தாக்கத்தைக் குறைக்க உதவியதாக ஆராய்ச்சி கூறியது.

அத்தகைய மேகங்கள் பூமியின் பருவநிலையைப் பாதிக்கும் தன்மைகொண்டவை என்பது அறிவியல்துறைக்கு ஒரு புதிய தகவல்.

அவற்றின் விளைவுகளைப் புரிந்துகொள்ள, அதிகமாக ஆராயவேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறின

Recommended For You

About the Author: Editor