
இந்தியாவின் பெங்களூரு நகரில் உள்ள iPhone தொழிற்சாலையில் ஊழியர்கள் கலவரம் செய்துள்ளனர்.
தாங்கள் சுரண்டப்படுவதாகவும், சில மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்றும் ஊழியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அதன் காரணமாக நேற்று Wistron தொழிற்சாலையில் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் அவர்கள் கார்களை உடைத்துக் கொளுத்தி, கட்டடங்களின் கண்ணாடிகளை நொறுக்கிச் சேதப்படுத்தியதாகக் கூறப்பட்டது.
100 பேர் கைது செய்யப்பட்டனர்.
தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
ஊழியர்களின் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
பெங்களூரு iPhone தொழிற்சாலையில் கிட்டத்தட்ட 15,000 பேர் வேலை செய்கின்றன