நிலவிலிருந்து பூமிக்கு பாறை மாதிரிகளுடன் திரும்பும் சீன விண்கலம்

நிலவிலிருந்து பாறை மாதிரிகளுடன் சீன விண்கலம் பூமிக்குத் திரும்புகிறது.

நிலவிலிருந்து விண்கலம் இன்று புறப்பட்டதாகவும் அது இன்னும் மூன்று நாள்களில் பூமிக்கு வரும் என்றும் சீனா தெரிவித்தது.

Chang’e 5 என்ற அந்த விண்கலத்தைச் சீனா கடந்த மாதம் வெற்றிகரமாகச் செலுத்தியது.

விண்கலத்தில் சுமார் இரண்டு கிலோகிராம் பாறை மாதிரிகள் உள்ளன.

அவற்றை நிலவிலிருந்து பூமிக்குக் கொண்டுவருவதற்குச் சீனா 40 ஆண்டுகளாகப் போராடிவருகிறது.

இதற்கு முன்னர், அமெரிக்காவும் முன்னாள் சோவியத் யூனியனும் அவ்வாறு நிலவிலிருந்து மண்மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவந்து ஆய்வில் ஈடுபட்டன.

தற்போது சீனா எடுத்துவரும் மாதிரிகள் வேறு எந்த நாடும் கொண்டுவராத அளவு பழைமையானது என்று கூறப்படுகிறது.

பாறை மாதிரிகளில் சில கிராம்களை மற்ற நாடுகளுக்குக் கொடுக்கவிருப்பதாகச் சீனா தெரிவித்திருந்தது.

விண்ணில் ஆய்வு நிலையத்தை அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. அந்தப் பணியை 2022ஆம் ஆண்டு முதல் அது தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor