வெனிசுவேலா கடற்கரைகளில் ஒதுங்கும் தங்கம், வெள்ளி நகைகள்

வெனிசுவேலாவின் சிறிய மீன்பிடி கிராமமான குவாகாவின் கடற்கரைகளில் (Guaca) கடந்த சில மாதங்களாகத் தங்க, வெள்ளி நகைகள், ஆபரணங்கள், தங்கக் கட்டிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முதலில், யோல்மன் லாரெஸ் (Yolman Lares) என்பவர் தான் செப்டம்பர் மாதத்தில் கன்னிமேரி படமுள்ள தங்கப் பதக்கம் ஒன்றைக் கண்டுபிடித்தார்.

அதை அடுத்து, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரும் கடற்கரையிலிருந்து பொருள்களை எடுத்துள்ளனர்.

அவர்களுக்கு அதிகம் கிடைத்தது தங்க மோதிரங்கள் என New York Times செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அவ்வாறு கண்டுபிடித்த பொருள்களைச் சிலர் 1,500 டாலர் வரை விற்றதாகக் கூறப்படுகிறது.

பொருளியல் நெருக்கடியால் சிரமத்தை எதிர்நோக்கும் அந்தக் கிராம மக்களுக்கு, அது சற்று நிவாரணம் அளிக்கின்றது.

அந்தப் பொருள்களை விற்றதால், உணவு வாங்க முடிவதாகச் சிலர் New York Timesஇடம் கூறினர்.

ஆனால், அந்தப் பொருள்கள் எப்படிக் கடற்கரையை வந்தடைந்தன என்பது மர்மமாகவே இருக்கின்றது.

Recommended For You

About the Author: Editor