அமெரிக்காவின் Alexion நிறுவனத்தை AstraZeneca மருந்தாக்க நிறுவனம் வாங்கியது

பிரிட்டனின் AstraZeneca நிறுவனம், 39 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவின் Alexion மருந்தாக்க நிறுவனத்தை வாங்கியுள்ளது.

அரிய வகை நோய்எதிர்ப்பு கோளாறுகளுக்கான
Soliris மருந்தை உருவாக்கிய நிறுவனம் Alexion.

அந்த மருந்து இன்னும் மேம்படுத்தப்பட்டு, தற்போது Ultomiris என அழைக்கப்படுகிறது.

அதைச் சீனாவுக்கும், மற்ற வளர்ந்துவரும் சந்தைகளுக்கும் விநியோகிக்க AstraZeneca திட்டமிடுகிறது.

Alexion நிறுவனத்தை வாங்குவதற்கான AstraZenecaவின் ஒப்பந்தத்திற்கு இருதரப்பு இயக்குநர் குழுக்களும் ஒப்புதல் அளித்துள்ளன.

அடுத்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

COVID-19 தடுப்புமருந்தைக் கண்டுபிடிக்கும் போட்டியில், AstraZeneca பின்னடைவைச் சந்தித்துள்ள நிலையில், அந்த முக்கியமான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

தடுப்புமருந்து 90 விழுக்காடு வரையாவது பயனளிக்கிறதா என்பதை உறுதிப்படுத்த, AstraZeneca நிறுவனமும் Oxford பல்கலைக்கழகமும் கூடுதலான சோதனைகளை நடத்தவுள்ளன.

Pfizer, Moderna நிறுவனங்களின் தடுப்புமருந்துகள் வெற்றிகரமாகச் செயல்படுவது உறுதியாகி, முன்னணி இடங்களைப் பிடித்துவிட்டன.

Recommended For You

About the Author: Editor