
தென் கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஒரே நாளில் இத்தனை பேர் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறை.
இதனால் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யும்படி நெருக்கடி அதிகரித்துவருகிறது.
மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது.
தேவாலயம் ஒன்றிலும், ஒன்று கூடல் நிகழ்ச்சிகளிலும் நோய் பரவியதாக அதிகாரிகள் குறைகூறினர்.
தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-In), நோய்த்தொற்று நிலவரம் மோசமாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பரவலைக் கட்டுப்படுத்த அனைவரும் தங்களால் இயன்றதைச் செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.