
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்டனில் பேரணி நடத்தியுள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் திரு. ஜோ பைடன் வெற்றி பெற்றதை அவர்கள் நிராகரித்தனர்.
பேரணி நடைபெறும் இடத்தைச் சுற்றி தமது ஹெலிகாப்டரைப் பறக்கவிட்டதன் மூலம், ஆர்ப்பாட்டக்காரர்ளுக்குத் தமது ஆதரவைத் திரு. டிரம்ப் தெரிவித்தார்.
ராணுவ-கடற்படை அதிகாரிகளுக்கு இடையிலான காற்பந்து விளையாட்டைக் காண ஹெலிகாப்டரில் அவர் சென்றுகொண்டிருந்தார்.
வாஷிங்டனை அடுத்து, ஜார்ஜியா (Georgia), பென்சில்வேனியா (Pennsylvania), மிச்சிகன் (Michigan) முதலிய மாநிலங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
அந்த முக்கிய மாநிலங்களில், வாக்கு எண்ணிக்கையிலும், தேர்தல் முடிவுகளிலும் பல முறைகேடுகள் நேர்ந்ததாய்த் திரு. டிரம்ப்பின் பிரசாரக் குழுவினர் குறைகூறி வருகின்றனர்.