விண்வெளி சுற்றுப்பயணத்தில் தடங்கல்..

Virgin Galactic நிறுவனத்தின் விண்வெளிக்குச் செல்லும் விமானச் சோதனையில் சிக்கல் ஏற்பட்டதை அடுத்து, சோதனை நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று அமெரிக்காவின் நியூ மெக்சிக்கோ மாநிலத்திலிருந்து புறப்பட்ட விமானம், தொழில்நுட்பக் கோளாற்றால் சுமார் 1 மணி நேரத்தில் பூமிக்குத் திரும்பியது.

அதிலிருந்த விமானிகள் இருவரும் பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியதாக நிறுவனம் கூறியது.

மோட்டாரில் ஏற்பட்ட பிரச்சினை தொழில்நுட்பக் கோளாற்றுக்குக் காரணமாகக் கூறப்பட்டது. சில மோட்டார்கள் தயார் நிலையில் இருக்கின்றன என்றும் அது சுட்டியது.

விமானத்தைச் சரி பார்த்த பின், சோதனை மீண்டும் நடைபெறும் என்று நிறுவனம் குறிப்பிட்டது.

Virgin Galactic, அடுத்த ஆண்டு, பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்காக, சுமார் 600 வாடிக்கையாளர்கள், 250,000 டாலர் வரை செலுத்தி, பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor