டிரம் ஆதரவாளர்கள் வாஷிங்டனில் பேரணி

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள், தலைநகர் வாஷிங்டனில் பேரணி நடத்தியுள்ளனர். கடந்த மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் திரு. ஜோ பைடன் வெற்றி பெற்றதை அவர்கள் நிராகரித்தனர். பேரணி நடைபெறும் இடத்தைச் சுற்றி தமது... Read more »

தென் கொரியாவில் ஒன்று கூடல் கூட்டத்தால் கிருமிப்பரவல்

தென் கொரியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்குக் கிருமித்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் இத்தனை பேர் பாதிக்கப்படுவது இதுவே முதன்முறை. இதனால் பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யும்படி நெருக்கடி அதிகரித்துவருகிறது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. தேவாலயம் ஒன்றிலும், ஒன்று... Read more »

அமெரிக்காவின் Alexion நிறுவனத்தை AstraZeneca மருந்தாக்க நிறுவனம் வாங்கியது

பிரிட்டனின் AstraZeneca நிறுவனம், 39 பில்லியன் டாலருக்கு அமெரிக்காவின் Alexion மருந்தாக்க நிறுவனத்தை வாங்கியுள்ளது. அரிய வகை நோய்எதிர்ப்பு கோளாறுகளுக்கானSoliris மருந்தை உருவாக்கிய நிறுவனம் Alexion. அந்த மருந்து இன்னும் மேம்படுத்தப்பட்டு, தற்போது Ultomiris என அழைக்கப்படுகிறது. அதைச் சீனாவுக்கும்,... Read more »

வெனிசுவேலா கடற்கரைகளில் ஒதுங்கும் தங்கம், வெள்ளி நகைகள்

வெனிசுவேலாவின் சிறிய மீன்பிடி கிராமமான குவாகாவின் கடற்கரைகளில் (Guaca) கடந்த சில மாதங்களாகத் தங்க, வெள்ளி நகைகள், ஆபரணங்கள், தங்கக் கட்டிகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலில், யோல்மன் லாரெஸ் (Yolman Lares) என்பவர் தான் செப்டம்பர் மாதத்தில் கன்னிமேரி படமுள்ள... Read more »

குளவிக்கூட்டை அழிக்க சீனாவில் புதிய உத்தி

குளவிக்கூடுகளை அழிக்க, சீனாவில் புதிய உத்தி கையாளப்படுகிறது. ஆளில்லா வானூர்தி மூலம் நெருப்பைக் கொண்டு குளவிக்கூடுகள் அழிக்கப்படுகின்றன. உயரமான மரங்களில் குளவிகள் கட்டிய கூடுகளை சாம்பலாக்க அந்த ஆளில்லா வானூர்தி உதவுகிறது. பார்க்க ஆறு கால் சிலந்திபோல் இருக்கும் ஆளில்லா... Read more »

காட்டுத்தீயால் பூமியின் மேல் மண்டலத்தில் அதிகப் புகை – உலக வெப்பம் குறைந்ததா ?

ஆஸ்திரேலியாவின் அண்மைக் காட்டுத் தீ பருவத்தால் பூமியின் மேல் மண்டலத்தில் அதிகப் புகை காணப்படுகிறது. அதன் காரணமாக, உலக வெப்பம் சற்றுக் குறைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. காட்டுத் தீயால் சுழற்றப்பட்ட காற்று உலகம் முழுவதும் நகர்ந்தது. தீயால் மிக அரிதான... Read more »

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பிடன் கையாளவிருக்கும் விடயங்கள்!

அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்கவுள்ள ஜோ பிடன் தனது ஆட்சிக் காலத்தில் கையாளவுள்ள முக்கிய விடயங்கள் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனடிப்படையில் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய சுகாதார நெருக்கடியான கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துதல் தொடர்பிலேயே ஜோ பிடன் அதிக கவனம் செலுத்தவுள்ளதாக... Read more »

ரஷ்யாவில் நாளொன்றுக்கான பாதிப்பு எண்ணிக்கை பதிவானது!

ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவு, நாளொன்றுக்கான அதிகபட்ச கொரோனா வைரஸ் (கொவிட்-19) பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் ரஷ்யாவில் 21ஆயிரத்து 798பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்ததோடு, 256பேர் உயிரிழந்துள்ளதாக, ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை கண்காணிக்கும்... Read more »

முதலாம் உலகப்போரின் போது புறா மூலம் அனுப்பப்பட்ட கடிதம்!

ஏறக்குறைய நூறு வருடங்களுக்கு முன் அனுப்பப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும், கடிதத்தினை உள்ளடக்கிய மிகச் சிறிய கலன் ஒன்று பிரான்சில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிழக்கு பிரான்சில் நடை பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஓர் ஜோடி குறித்த சிறிய குப்பி வடிவிலான கலனைக் கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

அரபு இராச்சியத்தில் நங்கூரமிட்டது நியூ டைமண்ட் கப்பல்!

இலங்கை கடற்பரப்பில் தீ பரவல் ஏற்பட்ட நியூ டைமண்ட் கப்பல் இந்தியப் பெருங்கடல் முழுவதுமான நீண்ட பயணத்திற்குப் பின்னர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சென்றுள்ளது. குறித்த கப்பல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை புஜைராவில் நங்கூரமிட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான படங்கள்... Read more »